கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு மாத காலத்திற்கு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தவணைத் தொகை கேட்டு வற்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர், மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் தவணைத் தொகை கேட்டு சென்றபோது, பெண்கள் அந்த ஊழியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.