கோவையில் உள்ள பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்து, இன்று கரூர் பேருந்து நிலையம் அருகே திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.
ஆனால் அனுமதி கிடைக்காததால் கரூர் லைட் ஹவுஸ் அருகே உள்ள பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கட்சி அலுவலகம் முன்பு திரண்ட பாஜகவினர் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் பெண்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திராவிடர் கழகத்தை தடைசெய்யவேண்டும், கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரம் புண்ணியத் தலங்களில் ஆடி அமாவாசை தினத்தன்று மக்கள் கூடத் தடை