இது தொடர்பாக தமிழ்நாடு வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கோவிட்-19 பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் எங்களுக்கு நிவாரண நிதியுதவியாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் .மேலும், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தகுதிச் சான்றை புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும்.
போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம், மாநிலங்களுக்கு இடையிலான வரிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.