நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ அரங்கில், பிரஸ் & மீடியா ரிப்போர்டர் சங்கத்தின் முதலாவது அறிமுகக் கூட்டம் மற்றும் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்களுக்கு தொழிலாளர் நல வாரியம் அடையாள அட்டை பெற்றுத்தருதல், உறுப்பினர்கள் பெயரில் ஆயுள் காப்பீடு பதிவுசெய்தல், நீலகிரி மாவட்டத்தில் பணி புரியும் பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மானிய விலையில் வீட்டு மனை பட்டா பெற்றுத்தருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிரஸ்&மீடியா ரிப்போர்டர் சங்கத்தின் அறிமுகக் கூட்டம் - நீலகிரி மாவட்டம் குன்னூர்
நீலகிரி: பிரஸ்&மீடியா ரிப்போர்டர் சங்கத்தின் முதலாவது அறிமுகக் கூட்டம் மற்றும் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி குன்னூர் ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்றது.
பிரஸ் & மீடியா ரிப்போர்டர் சங்கத்தின் அறிமுகக் கூட்டம்
இதில், செயலாளார் மதிமாறன், சங்கப் பொருளாளர் கிருஷ்ணராஜ், சங்க அமைப்பாளார் குமரேசன், நிருபர் பிரபுக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.