தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய பி. ஆர். பாண்டியன், 'நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படாததால், பெரும் விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை உள்ளது. விவசாயிகளின் கடனை நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில், உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.