தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதற்கட்டமாக வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது உள்ளூர்வாசிகளும் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள் சங்கத்தினர் தாமாக முன்வந்து கடைகளின் திறப்பு, அடைப்பு நேரத்தைக் குறைத்துள்ளனர்.
9 காவலர்களுக்கு கரோனா: காவல் நிலையங்கள் மூடல் - Corona death
தென்காசி: புளியங்குடி பகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் 9 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அக்காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளில் சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். தற்போது தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் கோட்டத்திற்கு உட்பட்ட மூன்று காவல் நிலையங்களில் புளியங்குடி, சிவகிரி, சேர்ந்தமரம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்துவரும் பெண் காவலர்கள் உட்பட ஒன்பது காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூன்று காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டு தூய்மைப் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுவருகின்றன.