தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நாய்களுக்குத் தமிழில் பெயர் சூட்டியக் காவல் கண்காணிப்பாளர்! - பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

பெரம்பலூர்: மாவட்ட காவல் துறைக்குப் புதியதாக வாங்கப்பட்ட நாய்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழில் பெயர் சூட்டினார்.

நாய்களுக்கு தமிழில் பெயர் சூட்டிய காவல் கண்காணிப்பாளர்!
நாய்களுக்கு தமிழில் பெயர் சூட்டிய காவல் கண்காணிப்பாளர்!

By

Published : Jul 12, 2020, 12:28 AM IST

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய்ப்படை பிரிவு சார்பாக வாங்கப்பட்ட இரண்டு நாய் குட்டிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழில் பெயர் சூட்டினார்.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் குற்றங்களை கண்டறியவும், வெடி பொருள்கள் போன்றவற்றை கண்டறியவும் நாய்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் புதியதாக இரண்டு நாய் குட்டிகள் வாங்கப்பட்டன.

அதில் மோப்பநாய் பிரிவிற்கு வாங்கிய நாய்க்குட்டிக்கு பைரவா எனவும், வெடி பொருள்கள் கண்டறியும் பிரிவிற்கு வாங்கிய நாய்க்குட்டிக்கு சக்தி எனவும் தமிழ் பெயரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வைத்தார்.

மேலும் நாய்க்குட்டி பயிற்றுநர் மற்றும் பாதுகாவலர்களுக்குத் தக்க அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்புராமன், உதவி ஆய்வாளர் சுவாமிநாதன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details