மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றிவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குடிப்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக தியாகதுருகம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம் அமைப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தியாகதுருகம், காந்திநகர், பெரியாம்பட்டு, சடையான்குளம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தியாகதுருகம் புறவழிச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.