தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நாம் தமிழர் கட்சியை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்! - சீமான்

திண்டுக்கல்: நாம் தமிழர் கட்சியை தடை செய்து அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாயக்கர் உறவின்முறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

People protest For ban the Naam Tamilar Party
People protest For ban the Naam Tamilar Party

By

Published : Jul 27, 2020, 7:06 PM IST

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாயக்கர் உறவின்முறை சார்பில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சீமான் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் ஆகியோரின் வரலாற்று நிகழ்வினை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், அவரது கட்சியினர் பொதுமேடைகளில் தவறாகப் பேசுகின்றனர்.

மேலும் சமூக வலைதளங்களிலும் தவறாக சித்தரித்து தெலுங்கு பேசும் நாயுடு, நாய்க்கர் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி அவர்களை இழிவாக பேசி வருகின்றனர்.

இது போன்ற செயல்கள் சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதாக அமையும் என்பதால் உடனடியாக நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.

இதையும் படிங்க:பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரப் பட்டியல் வெளியிட கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details