திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இயங்கிவரும் தனியார் காலணி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்றின் காரணமாக, ஊரடங்கிற்குப் பிறகு இயங்கும் சில தொழிற்சாலைகளில் முறையான ஊதியம் வழங்கப்படாமலும், குறைவான எண்ணிக்கையிலேயே ஆட்களைப் பணிக்கு அமர்த்தியும் வருகின்றனர்.
தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கக்கோரி முதலமைச்சருக்கு அஞ்சல்!
திருப்பத்தூர்: ஆம்பூரில் தனியார் தொழிற்சங்க அமைப்பு சார்பாக, தனியார் காலணி தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கக்கோரி முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனால் பலர் வேலை இழக்கும் நிலையில் உள்ளனர். மேலும் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த மாதத்தில் முறையான ஊதியம் இதுவரையில் வழங்கப்படாமல் இருப்பதாலும்; நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரியும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சார்பாக, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
மேலும் ஊரடங்கு அமலில் உள்ளதால், காவல் துறையினர் அனுமதியில்லாமல் நடைபெற்ற அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆம்பூர் நகர காவல் துறையினர் கைது செய்தனர்.