டெல்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் தனது "போஸ்ட்பெய்ட்" கடன் சேவைகளை விரிவுபடுத்துவதாக அறிவித்ததுள்ளது. பயனர்கள் மளிகைக் கடைகள் மற்றும் ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ஹால்திராம், அப்போலோ பார்மசி, க்ரோமா, ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற பிரபலமான சில்லறை விற்பனை இடங்களிலிருந்து பொருட்களை வாங்குவதை இது எளிதாக்கும் என்று நிறுவன தரப்பில் நம்பப்படுகிறது.
மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க பேடிஎம்-இன் போஸ்ட்பெய்டு கடனுதவி! - paytm
பேடிஎம் தனது "போஸ்ட்பெய்ட்" கடன் சேவைகளை மளிகைக் கடைகள், ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ஹால்திராம், அப்போலோ பார்மசி, க்ரோமா, ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற பிரபலமான சில்லறை விற்பனை இடங்களுக்கு விரிவுபடுத்தி பயனர்கள் பொருட்களை வாங்குவதை எளிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பேடிஎம் தனது "போஸ்ட்பெய்ட்" சேவையின் விரிவாக்கம் மூலம் பயனர்கள் மளிகைப் பொருட்கள், பால் மற்றும் பிற வீட்டு அத்தியாவசியங்களை மாத கடனில் வாங்க முடியும். மாதத்தின் முடிவில் வாங்கிய பணத்தை திருப்ப செலுத்தினால் போதும். இது எந்த வகையிலும் பிணையில்லாத கடனாகும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் போஸ்ட்பெய்ட் இரண்டு வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து இந்த பயன்பாட்டை பயனர்களுக்கு அளிக்கிறது. 20ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இதில் பெற முடியும் என பேடிஎம் கூறியுள்ளது.