தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முதலமைச்சருக்கு அமெரிக்க விருது: அமைச்சர் கடம்பூர் ராஜு - அமைச்சர் கடம்பூர் ராஜு

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி பாராட்டி “பால் ஹாரிஸ் ஃபெலோ” என்ற விருது வழங்கப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் மக்கள் சேவையை பாராட்டி அமெரிக்கா விருது வழங்குகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

By

Published : Jul 10, 2020, 8:35 PM IST

இது தொடர்பாக அவர் கூறுகையில், " அமெரிக்க நாட்டின், சிகாகோ மாகாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் " தி ரோட்டரி பவுன்டேஷன் ஆப் ரோட்டரி இண்டர்நேஷனல்" என்ற அமைப்பு ஆண்டுதோறும் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு விருது ஒன்றினை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது.

பால் ஹாரிஸ் என்ற மக்கள் தொண்டரின் பெயரில் வழங்கப்படும் “பால் ஹாரிஸ் ஃபெலோ” விருது இந்தாண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி வழங்குவதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details