இன்று முதல் பொதுமக்களுக்கான ரயில் சேவை தொடங்கிய நிலையில், கோவையில் இருந்து சென்னைக்குச் செல்லும் கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி வரை இயக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று 21 பெட்டிகளைக் கொண்ட இன்டர்சிட்டி பயணிகள் விரைவு ரயில், 287 பயணிகளுடன் கோவையிலிருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்டு நண்பகல் 12.30 மணி அளவில் காட்பாடி சந்திப்பை வந்தடைந்தது.