தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஹர்பஜனின் சாதனை... சமன் செய்த பார்திவ் படேல்! - பார்திவ் படேல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற ஹர்பஜன் சிங்கின் சாதனையை, பெங்களூரு வீரர் பார்திவ் படேல் சமன் செய்துள்ளார்.

அதிக டக் அவுட்;  சாதனையை சமன் செய்த பார்திவ் படேல்

By

Published : May 5, 2019, 2:19 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசரஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 54ஆவது லீக் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இதில், 176 ரன் என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியில் பார்திவ் படேல், கேப்டன் கோலியுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். இதையடுத்து, புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே பார்திவ் படேல் அவுட் ஆனார். புவனேஷ்வர் குமார் வீசிய லெந்த் பந்தை, பார்திவ் லெக் சைடில் ஃப்ளிக் ஷாட் ஆட முயற்சித்தார். ஆனால், பேட்டில் எட்ஜ் வாங்கியதால், உயரத்தில் சென்ற பந்தை மனீஷ் பாண்டே லாவகமாகப் பிடித்தார்.

இதனால், பார்திவ் படேல் டக் அவுட் உடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன ஹர்பஜன் சிங்கின் சாதனையை தற்போது, அவர் சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர்களின் விவரம்:

  1. பார்திவ் படேல், ஹர்பஜன் சிங் - 13
  2. கம்பீர், ராயுடு, பியூஷ் சாவ்லா, மனீஷ் பாண்டே, ரோகித் ஷர்மா - 12
  3. ரஹானே - 11
  4. அமித் மிஸ்ரா, மந்தீப் சிங் - 10

இந்தத் தொடரில் ஆர்சிபி அணியைப் பொறுத்தவரையில், கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரை விட, பார்திவ் படேல்தான் பேட்டிங்கில் சிறப்பாக ஜொலித்தார். குறிப்பாக, சென்னை அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் அனைத்து வீரர்களும் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், பார்திவ் படேல் மட்டும் நிலைத்து நின்று ஆடினார்.

இந்தத் தொடரில் 14 போட்டிகளில், இரண்டு அரைசதம் உட்பட 373 ரன்களை குவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details