மதுரையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையங்களில் அதிகப்படியான ஆட்டோக்கள் இயக்கப்படும் நிலையில், இதில் சில ஆட்டோக்கள் டீசல் மூலமாகவும், சில ஆட்டோக்கள் எல்பிஜி கேஸ் மூலமாகவும் இயக்கப்படுகிறது.
மதுரையில் சுமார் 2 ஆயிரத்து 223 ஆட்டோக்கள் ஓடுவதாகவும், இது தவிர வாடகைக் கார், இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இதனால், மதுரை நகர் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் பகுதிகளில் பணிகள் நடந்துவருகிறது.
இந்நிலையில், புதிய ஆட்டோ ரிக்சாக்களுக்கு அலுவலர்கள் அனுமதிவழங்குகிறார்கள்.