தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

போலி மருத்துவர்களைக் கண்டறிய ஆன்லைன் வசதி அறிவிப்பு! - போலி மருத்துவர்கள்

சென்னை: போலி மருத்துவர்களைக் கண்டறிய ஆன்லைன் வசதியை ஏற்படுத்தி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

போலி மருத்துவர்கள்
போலி மருத்துவர்களை கண்டறிய ஆன்லைன் வசதி

By

Published : Jun 13, 2020, 4:20 AM IST

இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றை எதிர்கொள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகம் ஆகியவற்றில் மருத்துவராகப் பதிவு செய்து, சான்றிதழ் பெற்றுள்ள சித்தா / ஆயுர்வேதா / யுனானி மற்றும் யோகா (ம) இயற்கை மருத்துவம் ஆகிய மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அரசால் அங்கீகரிக்கப்படும்.

இந்திய மருத்துவ முறையின் கீழ் சிகிச்சைப் பெற விரும்பும், பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகம் மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் ஆகியவற்றில் பதிவு பெற்ற மருத்துவர்கள் என்பது குறித்த உண்மை தன்மையைத் தெரிந்துகொண்ட பின்னர், மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

தற்போது, மூலிகை மருத்துவம் / இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர் மருத்துவம் போன்ற பல்வேறு பெயர்களில் எவ்விதப் பதிவும்/அங்கீகாரமும் இல்லாத போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பது குறித்து தெரிய வருகிறது.

ஆதலால், மருத்துவர்களின் உண்மைத் தன்மையினை தெரிந்து கொள்ளும் வழிமுறையின்படி அவருடைய பெயர், மருத்துவக் கல்வித் தகுதி, பதிவு எண் ஆகியவற்றை உறுதிசெய்த பின்னர், சிகிச்சைப் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவர்களின் உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

1. www.tngmc.com

2. tnsmc1998@gmail.com

3. tnbim1983@gmail.com

தொலைபேசி எண்.044-26190246

இதன் மூலம் கண்டறியும் போலி மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details