கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மேலப்பெருவிளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி தாமராட்சி. முத்துசாமி அவரது வீட்டின் அருகில் உள்ள அலெக்ஸ் என்பவரின் சித்தப்பா நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டியுள்ளார்.
இதனால் முத்துசாமிக்கும், அலெக்சுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அலெக்ஸ், முத்துசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து முத்துசாமி ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், ஆசாரிபள்ளம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.