தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்! - NTK News

ராமநாதபுரம் : மின் கட்டண உயர்வை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!

By

Published : Jul 22, 2020, 10:54 PM IST

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரியம் மூலமாக கடந்த இரு மாதத்திற்கான மின் கட்டண கணக்கு சில நாள்களுக்கு முன்பு கணக்கெடுக்கப்பட்டது.

இந்த கணக்கெடுப்பில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளதாகவும், வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கை பதிவானதாகவும் பெரும்பாலான மக்கள் குற்றம்சாட்டினர்.

இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, உடனடியாக அவற்றைத் திரும்பப் பெறக் கோரி திமுக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து பதாகை ஏந்தும் அடையாளப் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வர மின்வாரிய அலுவலத்தை ராமேஸ்வரம் நகர நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் அம்மாவட்டச் செயலாளர் கண் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details