தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு! - சென்னை மாவட்ட செய்தி

சென்னை : அவசர மின் பராமரிப்புப் பணிகளுக்காக, தமிழ்நாடு மின் வாரியம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில், மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவித்துள்ளது.

சென்னையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

By

Published : Jun 5, 2020, 9:13 PM IST

Updated : Jun 5, 2020, 11:43 PM IST

தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பகிர்மானக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மின் தடை ஏற்படும் பகுதிகளாக தாம்பரம் மற்றும் சிட்லப்பாக்கம் பகுதிகளில், அவசர பராமரிப்புப் பணிகள் செய்ய வேண்டிய காரணத்தால் நாளை (06.06.2020) காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வமங்களா, சரஸ்வதி நகர், ஜோதி நகர் 1,2ஆவது தெரு, ராஜிவ் காந்தி தெரு, முத்துலட்சுமி தெரு, துரைச்சாமி நகர், ஆர்.ஆர்.நகர், சத்ரபதி சிவாஜி நகர், திரு.வி.க.நகர், அரிதாஸ்புரம் பிரதான சாலை ஆகியப் பகுதிகளில் பணிகள் முடிவடைந்த பின்னர், மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின் தடை செய்யப்படும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்றார் போல் தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ள மின் வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated : Jun 5, 2020, 11:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details