இந்தியா - சீனா இடையே அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை இருப்பதாக நேபாள வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா - சீனா இடையே சுமுகத் தீர்வு: நேபாளம் நம்பிக்கை - இந்திய சீன எல்லை பிரச்னை
காத்மாண்டு: இந்தியா - சீனா இடையிலான சமீபத்திய எல்லை மோதல்கள் அமைதியான வழிமுறைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நேபாளம் விரும்புகிறது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அமைதிக்காக எப்போதும் நேபாளம் துணை நிற்கும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் நல்ல நட்புறவின் மூலம் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் பின்னணியில் நேபாளம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகளுடன் ஜூன் 15ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் கர்னல் உட்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.