தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

முதியவர் உடலை நல்லடக்கம் செய்த காவலருக்கு நெல்லை எஸ்.பி பாராட்டு! - முதியவர் உடலை நல்லடக்கம் செய்த காவலருக்கு எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி : அடையாளம் தெரியாத முதியவரின் உடலை தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்த காவலரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் பாராட்டினார்.

Nellai SB praises the police who took care the old man's body
Nellai SB praises the police who took care the old man's body

By

Published : Sep 8, 2020, 6:46 AM IST

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள ஆழ்வார் குத்தன்குழி பகுதியில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து அந்த ஊர் பொதுமக்கள்‌ திருவம்பாளாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்து கிராம நிர்வாக அலுவலர்விசாரணை மேற்கொண்டுள்ளார். ஆனாலும், உயிரிழந்த முதியவர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

எனவே, கிராம நிர்வாக அலுவலர், கூடங்குளம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் பரமசிவத்திற்கு தகவல் இது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, பரமசிவம் தாமாக முன்வந்து அடையாளம் தெரியாத அந்த முதியவரின் உடலை மீட்டு தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்துள்ளார்.

காவலரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், முதல் நிலைக் காவலர் பரமசிவத்தை நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details