கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் ஊசி பாசிகளை விற்பனை செய்துவருகின்றனர்.
இவர்கள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறு செய்வதாக அவ்வப்போது மாநகராட்சி அலுவலகத்திற்குப் புகார்கள் வந்துள்ளன.
இதனால், நரிக்குறவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்லுமாறு நகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால் பலமுறை கூறியும் நரிக்குறவர்கள் இடத்தை மாற்றாமல் அங்கேயே இருந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் நரிக்குறவர்களின் உடைமைகளை மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துவந்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இன்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு தங்களது உடைமைகளை திருப்பித் தருமாறு கேட்டு அலுவலகத்தை முற்றுயிட்டனர்.
இதன்காரணமாக, மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழல் ஏற்பட்டது.