தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

டெம்போவை கடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு அடி, உதை! - Tempo theft in kanyakumari

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி பகுதியில் டெம்போவை கடத்திச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Kanyakumari tempo theft
Tempo theft

By

Published : Dec 10, 2020, 1:32 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், இவர் தனது வீட்டின் முன்பு தனக்குச் சொந்தமான டெம்போவை நிறுத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் அங்கு வந்த திட்டுவிளைப் பகுதியைச் சேர்ந்த அடிதடி உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ரூபன் (29) என்பவர் டெம்போவை கடத்திச் சென்றுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் டெம்போவை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். பின்னர் டெம்போவிலிருந்த ரூபனுக்கு அடி கொடுத்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

டெம்போவை கடத்திச் சென்றது எதற்காக என ரூபனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details