பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலிலுள்ள காந்தி சிலை முன்பு மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார்.
பெரம்பலூரில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
mmk Party protest In Perambalur
அப்போது, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லீம்கள் மற்றும் ஏழு தமிழர்களை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி, தமுமுக, பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.