சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வுமேற்கொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா சிகிச்சை அனுபவத்தை ஒரு இனிமையான அனுபவமாக மாற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
'பெண் களப் பணியாளர்களிடம் தவறாக நடந்துகொண்டால் நடவடிக்கை' - அமைச்சர் பாண்டியராஜன் - minister about women safety
சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் களப் பணியாளர்களிடம் தவறாக நடக்க முயலும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார்
கரோனா நோயாளிகளுக்கு தொலைக்காட்சி வசதி, குடும்பத்தினருடன் உரையாட வீடியோ கால் வசதி செய்யப்பட்டுள்ளன. யோகா பயிற்சி, மூலிகை குளியல் போன்றவையும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. தண்டையார்பேட்டை மண்டலத்தில் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் களப் பணியாளர்களிடம் தவறாக நடக்க முயலும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். துணிவுடன் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் பெண் களப் பணியாளர்களைப் பாதுகாப்பதே எங்கள் முதல் பணி. அவர்களுக்கு எந்தக் குறை ஏற்பட்டாலும் எனது தொலைபேசிக்கு அழைக்கலாம்” என்று தெரிவித்தார்.