சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட எல்லிஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள பகுதிமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினார்.
பொய் கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் - minister jayakumar about corona spread in tamilnadu
சென்னை: கரோனா தொடர்பாக பொய் கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டை பொறுத்தவரை கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவருகிறது. எப்போது முழுமையாக குறையும் என்பது உலக சுகாதார மையத்திற்குதான் தெரியும்.சென்னையை பொறுத்தவரை அதிகளவு காய்ச்சல் முகாம் அமைக்கபட்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். முகக்கவசம், தகுந்த இடைவெளி, கை கழுவுவதை பின்பற்றுவதன் மூலம் கரோனாவை எதிர்க்க முடியும்.
தொற்றின் தாக்கம் குறைவதற்கு நீண்ட காலம் ஆகும். அதுவரை மக்களை நாம் கட்டிப்போட முடியாது. அதே நேரத்தில் அவர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கை தளர்த்தினோம். தொற்று எண்ணிக்கையை குறைவாக கணக்குக் காட்டுவதாக கூறுவது தவறானது, பொய் கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை” என்றார்.