திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் செக் போஸ்டில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர், காவல் துறையினர் இணைந்து நடத்திய வாகன சோதனையில் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அது திருட்டு வாகனம் என தெரியவந்தது.
இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த நபர் கைது - Man arrested for stealing two-wheelers
திருவண்ணாமலை : கீழ்பென்னாத்தூர் பகுதியில் 5 இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அதை ஓட்டி வந்தவர் தஞ்சாவூர் மாவட்டம், திருமல்லைசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியாகு மகன் செல்வம் (35) என தெரியவந்தது. விசாரணையில் அவரது சகோதரியை கீழ்பென்னாத்தூரை சேர்ந்த ஷாஜகான் மகன் கலீல்(35) என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்திருப்பதாகவும், அவ்வப்போது கீழ்பென்னாத்தூருக்கு வந்து தானும் தனது சகோதரியின் கணவர் கலீலும் சேர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி திருச்சிக்கு எடுத்து சென்று விற்று வந்ததாகவும் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து திருச்சியில் நான்கு இருசக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து செல்வம் என்பவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் தலைமறைவாக உள்ள கலீலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.