சேலம் கடைவீதி பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சேலம் டவுன் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
புகையிலை பொருள்கள் வீட்டில் விற்பனை - காவல் துறையினர் பறிமுதல் - 20 lakh worth
சேலம்: பெரியார் தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி சோதனை நடத்தப்பட்ட பொழுது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை மூட்டைகளாக வீட்டில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 56 புகையிலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்றது தொடர்பாக, சேலம் டவுன் காவல் துறையினர், வெங்கடேஸ்வரன் (45)என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த நான்கு மாதங்களாக பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.