தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வெண்கலம் கிண்ணம் கூட கிடையாது- கோலிக்கு மல்லையா பதிலடி

ஆர்சிபி அணி, பேப்பரில் மட்டும்தான் நல்ல அணி என அந்த அணியின் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவரான விஜய் மல்லையா பெங்களூரு அணியின் கேப்டன் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.

பெயருக்குதான் நல்ல டீம், ஆனா ஒரு வெண்கலம் கிண்ணம் கூட கிடையாது- கோலிக்கு மல்லையா பதிலடி

By

Published : May 8, 2019, 11:24 PM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, இம்முறை கோலி தலைமையிலான ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) அணி கோப்பை வெல்லும் என அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த கனவுடன் இருந்தனர்.

அணியில், கோலி, டி வில்லியர்ஸ், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் இவர்களுடன் ஏலத்தில் புதிதாத தேர்வான ஹெட்மயர் என பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்ததுதான் அதற்கு முக்கிய காரணம். ஆனால், நடந்ததோ வேறு, நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே, ஆர்சிபி அணி முதல் 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான சாதனையை படைத்தது.

இறுதியில் அந்த அணி விளையாடிய 14 லீக் போட்டிகளில் 5 வெற்றி, 8 தோல்வி, 1 போட்டி முடிவு இல்லை என 11 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி இரண்டாவது முறையாக கடைசி இடத்தை பிடித்தது.

மல்லையா ட்வீட்

இதையடுத்து, ஆர்சிபி அணி கடைசி 7 போட்டிகளில், 5 வெற்றிகளை பதிவு செய்ததை நினைத்து நாம் பெருமை பட வேண்டும் என, அந்த அணியின் கேப்டன் கோலி, பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்நிலையில், அந்த பதிவிற்கு அந்த அணியின் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவரான விஜய் மல்லையா தற்போது பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெயருக்கு மட்டும்தான் ஆர்சி அணி நல்ல அணி, ஆனால் எப்போதும் கடைசி இடத்தை மட்டுமே பிடிக்கிறது என கிண்டலாக குறிப்பிட்டார். அவரது நக்கலான பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details