டெல்லி: வாடிக்கையாளர்களின் வருகை குறைவால் ஜூன் முதல் பாதியில் 77 விழுக்காடு அளவிற்கு வணிக வளாகங்கள் இழப்பை சந்தித்துள்ளதாக மதிப்பாய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
வணிக வளாகங்களில் செயல்பட்டுவரும் பெரிய மற்றும் சிறிய சில்லறை விற்பனையாளர்களின் வருவாய் 61 விழுக்காடு அளவுக்கு சரிந்து உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய சில்லறை விற்பனையாளர்களின் பங்களிப்புடன் இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (RAI) நடத்திய மதிப்பு ஆய்வின்படி பொது முடக்கத்தில் அரசு தளர்வுகளை அறிவித்த போதிலும், வாடிக்கையாளர்களின் வருகை குறைவால் வணிகர்கள் இழப்பை சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்கள் 70 விழுக்காடும், துணிக்கடைகள் 69 விழுக்காடும், நகைக்கடைகள் 65 விழுக்காடும், சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளது.