தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருமணம் முடிந்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் - பெற்றோர் ஆணவக்கொலை செய்யத் தேடுவதாகப் புகார் - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

குமரி: காதல் திருமணம் செய்துகொண்ட தங்களை ஆணவக்கொலை செய்யும் நோக்கோடு பெண்ணின் பெற்றோர் தேடி வருவதாக, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காதல் ஜோடி புகார் அளித்துள்ளனர்.

திருமணம் முடிந்த காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் - பெற்றோர் ஆணவக்கொலை செய்ய தேடுவதாக புகார்
திருமணம் முடிந்த காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் - பெற்றோர் ஆணவக்கொலை செய்ய தேடுவதாக புகார்

By

Published : Jul 5, 2020, 1:01 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 23 வயது இளைஞரும், கணபதிபுரம் அருகே வடக்கு கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 22 வயதான சுபா என்ற பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டபின், தக்கலை காவல் நிலையத்தில் ஆஜராகி திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விக்னேஷும் சுபாவும் நேரடியாக சென்று மனு அளித்தனர். மனுவில் தங்களை சுபாவின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆணவக் கொலை செய்யும் நோக்கத்தோடு தேடி வருவதாகவும்; மணமகனான தன் வீட்டிற்குச் சென்று மிரட்டி உள்ளதால், தங்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் விக்னேஷ் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் உயிருக்குப் பயந்து தலைமறைவாக வாழ்வதால், தங்களுக்கு காவல் துறை பாதுகாப்புத் தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details