தமிழ்நாடு

tamil nadu

சீனாவின் ட்ராகனோடு சண்டையிடும் இந்தியாவின் ஸ்ரீராமர் - வைரலாகும் தைவான் பத்திரிகை

தைபே : சீனாவின் பாரம்பரிய விலங்கான ட்ராகனுடன் இந்தியாவின் இந்து கடவுளான ஸ்ரீராமர் போரிடுவதாக தைவான் ஊடகம் வெளியிட்டுள்ள படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

By

Published : Jun 18, 2020, 4:53 PM IST

Published : Jun 18, 2020, 4:53 PM IST

சீனாவின் ட்ராகனோடு சண்டையிடும் இந்தியாவின் ஸ்ரீராமர் - வைரலாகும் தைவான் பத்திரிகை
சீனாவின் ட்ராகனோடு சண்டையிடும் இந்தியாவின் ஸ்ரீராமர் - வைரலாகும் தைவான் பத்திரிகை

இந்திய எல்லைப் பகுதியில் ராணுவ அலுவலர்கள் கடந்த மாதம் மேற்கொண்ட கட்டமைப்புப் பணிகளின்போது, சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்ததில் இருந்து தொடங்கிய பிரச்னையால் இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

இந்தியாவின் எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கை அடுத்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு பணியிலிருந்த ராணுவ அலுவலர் கர்னல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இந்திய படைவீரர்களை சீன ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி, படுகொலை செய்தததை அடுத்து நிலவரம் மீண்டும் மோசமானதாக மாறி இருக்கிறது.

அந்த சர்ச்சைக்குரிய நிலப்பரப்பான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்துப் பணியிலிருந்த எண் 14ஆம் வரிசையைச் சேர்ந்த சீன ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது. பல வீரர்கள் படுகாயமடைந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

50 ஆண்டுகளுக்கு பிறகான இந்தியாவுடனான சீன ராணுவத்தின் இந்த மோதல் போக்கு ஆசியக் கண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களங்களில் பேசும் பொருளாகி உள்ளது. குறிப்பாக, தைவான் நாட்டிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று இந்தியா - சீனா மோதல் குறித்து வெளியிட்டுள்ள படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

"நாங்கள் வெல்வோம் - உங்களை அழிப்போம்" என்ற தலைப்பில் சீன டிராகனுடன் இந்து கடவுளான ஸ்ரீ ராமர் சண்டையிடுவது போன்ற அந்த படத்திற்கு விளக்கம் தர வேண்டியதில்லை என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details