12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியள்ளன. இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 52ஆவது லீக் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாம் கரன் 55 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.