பல்லடத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், மக்களவைத் தேர்தல்தானே, இதில் நமக்கு தொடர்பில்லை என மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் தேர்தல் இது. மக்களவையில் நமது குரலும் ஒலிக்கவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
மக்கள் வியர்வையில் லாபம் பார்க்காதீர்கள் - கமல் பேச்சு
திருப்பூர்: மக்கள் வேர்வையில் லாபம் பார்க்கும் வகை வியாபாரிகள் சம்பாதிக்க அரசு திட்டம் மேற்கொள்ளக்கூடாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நமக்கும் பொருந்தும். இருக்கின்ற வழியை பலப்படுத்தி சாலைகள் அமைக்கவேண்டுமே, தவிர வியாபாரிகள் சம்பாதிக்க நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்க கூடாது. விவசாய நிலத்தை ஆக்கிரமித்து ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க ஒத்துக்கொண்ட திட்டத்திற்காக எங்களை பழி வாங்க வேண்டாம். மக்கள் வேர்வையில் லாபம் பார்க்க கூடாது. இந்தக் கருத்தில் ஒப்புதல் உள்ளதன் ஆரம்பமாகவும் அஸ்திவாரமாகவும்தான் நீதிமன்றம் தீர்ப்பு அமைந்துள்ளது. அதற்கு நன்றி சொல்லி தொடர்ந்து போராடுங்கள்.