தமிழ்நாடு

tamil nadu

‘பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேருங்கள்’ - விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

By

Published : Jun 11, 2020, 6:38 PM IST

கடலூர்: பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Join the Crop Insurance Program in Cuddalore  District Collector Request
Join the Crop Insurance Program in Cuddalore District Collector Request

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநீவன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், 2020ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் கார்/குறுவை/சொர்ணவாரி நெல் பயிர் மற்றும் இதர காரீப் பருவ பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் இம்மாவட்டத்தில் செயல்படுத்துகிறது. இதன்படி நடப்பாண்டில், கடலூர் மாவட்டத்தில், 517 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறாக கார்/குறுவை/சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 31 ஜூலை 2020 மற்றும் இதர காரீப் பருவ பயிர்கள் உளுந்து, மணிலா கிராம அளவிலும் மற்றும் கம்பு, எள் பயிர்கள் பிர்கா அளவிலும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 16 ஆகஸ்ட் 2020 ஆகும்.

எனவே, விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் இரு சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.626 இதர காரீப் பருவ பயிர்கள் உளுந்துக்கு ரூ.331/-ம், மணிலாவுக்கு ரூ.525/-ம், கம்புக்கு ரூ.122/-ம், எள் ரூ.156/-ம் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகத்தினை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details