'வெயில்', 'அங்காடி தெரு' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து, இசையமைத்துள்ளார்.
ஜெயில் படத்தில் தனுஷ் பாடிய பாடல் வெளியீடு! - Dhanush song
ஜெயில் படத்தில் தனுஷ், அதிதி ராவ் பாடியுள்ள 'காத்தோடு காத்தானேன்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜெயில்
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'காத்தோடு காத்தானேன்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. தனுஷ், அதிதி ராவ் இணைந்து பாடியுள்ள இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.