உலகம் முழுவதும் இன்று (ஜுன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினம்: தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி - Yoga perform by sanitary workers
அரியலூர்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினம்: தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி
இதில் அர்த்தராத்திரி, ஆசனம் திருவசனம், உட்கட்டாசனம் உள்ளிட்ட 16 வகையான ஆசனங்கள் செய்யப்பட்டன. இதில், நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தகுந்த இடைவெளியுடன் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதன்மூலம், அவர்கள் தங்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.