உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அணிகள், நேருக்கு நேர் மோதவுள்ள போட்டியில் ஒரு நிற ஜெர்சியுடன் விளையாடக் கூடாது. ஏதேனும் ஒரு அணி மாற்று நிற ஜெர்சியிடன் களமிறங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்திருந்தது. இதனால், நீல நிற ஜெர்சியுடன் தொடரில் விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் தங்களுக்கான மாற்று ஜெர்சியுடன் போட்டியில் பங்கேற்றன.
அதேசமயம், இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால், அவர்கள் ஜெர்சியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நீல நிற ஜெர்சியுடனே தொடரில் விளையாட உள்ளனர். இதனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் இந்திய அணி மாற்று நிற ஜெர்சியுடன் களமிறங்கவுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி சிவப்பு, இலங்கை அணி மஞ்சள் என தங்களுக்கான மாற்று நிற ஜெர்சியை தேர்வு செய்திருந்த நிலையில், இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியை தேர்ந்தெடுத்தது.