தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

புதுச்சேரியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்க அனுமதி! - Indian President approves Government Technical University in Pondicherry

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்க குடியரசுத் தலைவர் அனுமதி அளித்துள்ளதாக கல்வித்துறை செயலர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்க அனுமதி!
புதுச்சேரியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்க அனுமதி!

By

Published : Sep 5, 2020, 10:15 PM IST

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய புதுச்சேரி கல்வித்துறை செயலர் அன்பரசு கூறுகையில், "புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம் 2019 இன்று (செப்டம்பர் 5) முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே, புதுவையில் மத்திய பல்கலைக்கழகம் இருந்தாலும் தற்போது தொடங்கப்பட உள்ள தொழில்நுட்ப பல்கலைக் கழகமே புதுவையின் முதல் மாநில பல்கலைக்கழகமாகும். கடந்த 1985ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதுவை அரசு பொறியியல் கல்லூரியானது, 35 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில் தற்போது தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கிவருகிறது.

ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற சிறந்த கல்லூரிகள் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படுவது நடைமுறையில் இருப்பதால் அந்த திட்டத்தின் கீழ் புதுவை பொறியியல் கல்லூரியை, தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

புதுவை பிள்ளைச்சாவடியில் 280 ஏக்கரில் அமைந்துள்ள புதுவை அரசின் பொறியியல் கல்லூரியை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மாற்ற குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, இதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details