தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 17, 2020, 7:46 PM IST

ETV Bharat / briefs

பருவ மழையால் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு

தருமபுரி: பருவ மழை காரணமாக, வத்தல்மலையில் பலாப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது.

பருவமழையால் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு
பருவமழையால் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு

தருமபுரி மாவட்டம், வத்தல் மலையில் பால்சிலம்பு, பெரியூர், மன்னாங்காடு, கொட்டலாங்காடு, சின்னங்காடு, நாய்க்கனூர் உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு செவ்வந்தி பூ வகைகள், முந்திரி, சாத்துக்குடி, மா மற்றும் சில்வர் ஓக் மரங்கள், காப்பித் தோட்டங்கள், குச்சிக் கிழங்கு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற சிறுதானிய பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.

நடப்பாண்டில் பருவ மழை பரவலாகப் பெய்துள்ளது. தென்மேற்குப் பருவ மழை காரணமாக வத்தல்மலையில் பெரியூர், நாய்க்கனூர் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் உள்ள மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. விளைந்த பழங்கள் பெரியூர் கிராமத்தில் சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டு, விலை 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, வத்தல் மலையைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் தருமபுரி நகர மக்கள், மலையைச் சுற்றிப் பார்த்த பின்னர், ஆர்வத்துடன் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details