தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஒகேனக்கலில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு - காவிரி ஆறு

தருமபுரி: ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து நான்காயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது.

Increase in Cauvery water level in Hogenakkal
Increase in Cauvery water level in Hogenakkal

By

Published : Jul 16, 2020, 8:33 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து இரண்டாயிரம் கன அடியாக இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று (ஜூலை15) ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இரண்டு ஆயிரத்து 800 கன அடியாக அதிகரித்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகள் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர்வரத்து உயர்ந்து வருகிறது.

அதேசமயம் இன்று(ஜூலை 16) காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 4 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. 2019 ஆண்டு ஜூலை மாதத்தில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் மிக மிக குறைந்த அளவே திறந்து விடப்பட்டதால் நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு மாவட்ட நிர்வாகம் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தடைவிதித்துள்ளது.

இதனால் சுற்றுலாப்பயணிகள் இன்றி ஒகேனக்கல் களையிழந்து காணப்படுகிறது.

இதையும் படிங்க: விற்காமல் கிடக்கும் கோரைப் பாய்கள்... பயிரை நடலாமா? வேண்டாமா? - கலங்கும் காவிரி விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details