12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பலான ரசிகர்கள் இந்தத் தொடரை தங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலமே கண்டுக் களித்து வருகின்றனர்.
போட்டிகள் மாலை 4 மணிக்கும், இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது. இதனால், ஸ்மார்ட் ஃபோன்களில் ஹாட்ஸ்டார் செயலி மூலம் ஐபிஎல் போட்டியைக் காணும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, ஆன்லைன் உணவு விற்பனை விளம்பரத்தின் மூலம் ஆர்டர் செய்யும் வசதி செய்யப்பட்டது.
ஸ்விகி, சோமேட்டோ, ஃபூட் பாண்டா, உபர் ஈட்ஸ் போன்ற ஆன்லைன் உணவு விற்பனை செயலி மூலமாக, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, ஆன்லைனில் ஆர்டர் செய்து, ஐபிஎல் ஆட்டத்தில் ஒரு பந்தையும் மிஸ் செய்யாமல் கண்டுக் களித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் இருக்கும் நுகர்வோர் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ரெட்ஸீர் ஆராய்ச்சிப் படி, மற்ற நாட்களை விட ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும்போது, ஆன்லைன் உணவு விநியோகங்கள் 18 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆராய்ச்சின்படி, ஆன்லைன் உணவு விற்பணை செயலியை அதிகம் பயன்படுத்தும் மெட்ரா நகரங்களில் பெங்களூரு முதலிடத்தை பிடித்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, ஹைதராபாத் இரண்டாவது இடத்திலும், சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், இந்த ஆராய்ச்சியில் ரசிகர்கள் பிரஞ் ஃவைரஸ், ஐஸ் க்ரீம் ஆகிய உணவங்களைதான் அதிகம் ஆர்டர் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, ஹைதராபாத்தில் இருக்கும் பிரபல செட்டிஸ் உணவகங்களின் உரிமையாளர் அனிள் ஷெட்டி கூறுகையில், "ஐபிஎல் தொடர் நடைபெறாத நாட்களில் ஆன்லைன் மூலம் எங்களுக்கு 15 விழுக்காடு மட்டுமே வியாபாரம் செய்ப்பட்டது. ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்கியதன் மூலம், எங்களது வியாபாரம் 40 முதல் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடரை அடுத்து, உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்த விற்பனை அதிகரிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.