தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சென்னை அண்ணா பல்கலை விடுதியில் கரோனா சிகிச்சை? துணை ஆணையர் பதில் - துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விடுதிகள் கரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்படுமா என்பது குறித்து மாநகராட்சி துணை ஆணையர் பதிலளித்தார்.

தேவை ஏற்பட்டால் அண்ணா பல்கலைக்கழக விடுதி பயன்படுத்தப்படும்- துணை ஆணையர்
தேவை ஏற்பட்டால் அண்ணா பல்கலைக்கழக விடுதி பயன்படுத்தப்படும்- துணை ஆணையர்

By

Published : Jun 24, 2020, 1:22 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டடங்களை பயன்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியை ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதற்கு பதிலளித்த அண்ணா பல்கலைக்கழகம், மாணவர்கள், விடுதியில் உள்ள தங்களின் பொருள்களை எடுத்துச் செல்ல ஏதுவாக அவர்கள் விடுதிக்கு வந்துசெல்வதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் பட்சத்தில் விடுதியை ஒப்படைக்கத் தயார் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக விடுதியை கரோனா பணிகளுக்கு எடுத்துக்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், "தற்போதைய நிலையில் கரோனா தொற்று வீரியத்தை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நோய்த்தொற்று பரவலலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறோம். தேவைப்பட்டால் அண்ணா பல்கலைக்கழக விடுதியை கரோனா சிகிச்சை பணிகளுக்காக பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: மாணவர்களிடம் 6 மாதத்திற்கு கல்விக்கட்டணம் வசூலிக்கக் கூடாது - ஆம்ஆத்மி

ABOUT THE AUTHOR

...view details