இந்திய கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களின் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் என்.கே. கோயல், இந்திய தயாரிப்புகள் வாங்குவதில் மக்கள் நாட்டம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சீன செயலிகளுக்கு தடை; இந்திய செயலிகளுக்கு வரவேற்பு - சீன செயலிகள்
டெல்லி: இந்தியர்களாகிய நாம் இந்தியப் பொருள்கள் வாங்குவதில் நாட்டம் செலுத்த வேண்டும். இது இந்திய பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் என்று கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களின் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் என்.கே. கோயல் தெரிவித்தார்.
prof goyal chairman tema
அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்க முடியும் என்றார். சீனப் பொருள்களை வாங்கும் போது அவர்கள் நிறுவனம் தான் வருவாய் ஈட்டும். இதனை நுகர்வோர் புரிந்துகொள்ள வேண்டும்.
சீனாவைப் போன்றே, இந்திய தயாரிப்புகளையும் குறைந்த விலையில் சந்தைப்படுத்த முடியும் என்று கூறும் அவர், 59 சீன செயலிகளை அரசு முடக்கியது இந்திய நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.