தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மலேசியா டூ சென்னை: ஹோட்டல் தொழிலாளி நடுவானில் மரணம்! - நடுவானில் மரணமடைந்த தொழிலாளி

சென்னை: மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஹோட்டல் தொழிலாளி ஒருவர் நடுவானில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை  வந்த ஹோட்டல் தொழிலாளி நடுவானில் மரணம்
சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்த ஹோட்டல் தொழிலாளி நடுவானில் மரணம்

By

Published : Jun 24, 2020, 5:36 PM IST

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்களைச் சொந்த நாட்டிற்கு அழைத்துவர மத்திய அரசு ’வந்தே பாரத்’ என்ற திட்டத்தைத் தொடங்கியது. அத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மட்டும் 14 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக பக்ரைன், ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் சிக்கிய 608 பேர் நான்கு சிறப்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அதில் மலேசியாவிலிருந்து வந்த ஹோட்டல் தொழிலாளி ஒருவர் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோதே மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details