தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இந்து முன்னணியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் - tanjore

இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்த அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்து

By

Published : Jun 19, 2019, 9:08 PM IST

தஞ்சாவூரில் கோவில் கட்டுமானப் பணி ஒன்றை பார்வையிடச் சென்ற இந்து முன்னணி தலைவர் சுப்பிரமணியன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுத்ததன் காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அமைப்பின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் இந்து முன்னணி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதேபோல், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இன்று மாலை இந்து முன்னணி கோட்டத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணியினர் பத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்

ABOUT THE AUTHOR

...view details