தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2020, 4:43 PM IST

ETV Bharat / briefs

ஓபிசிக்கு வருமான சான்றிதழ் வேண்டாம் என்ற அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

சென்னை: பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சொத்து, வருமான சான்றிதழ்கள் வழங்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஜூன் 30ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Chennai High court
Chennai High court

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதி புரத்தைச் சேர்ந்த அகில பாரத பிராமணர் சங்கத்தின் தலைவர் குளத்துமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தின்படி இட ஒதுக்கீட்டு பலனை பெற சம்பந்தப்பட்டவர்கள் ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானத்தை கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு வருமான சான்று, சொத்து சான்றுகள் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இந்த சான்றிதழ்களை வழங்க வேண்டாம் என தாசில்தார்களுக்கு அறிவுறுத்தும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் ஜூன் 4ஆம் தேதி உத்தரவிட்டார். இதற்கு இடைக்கால தடை விதித்து, முழுமையாக இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 25) விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கையுடன் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ரெட்டி நலச் சங்கத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் கிருபாகரன் வழக்கு தொடர்ந்து இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் இந்த வழக்குகளையும் இணைத்து விசாரிப்பதாக கூறி ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details