இந்தியா சீனா எல்லையில் வீர மரணமடைந்த ராமநாதபுரம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனியின் உடல் ஜூன். 17ஆம் தேதி சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பழனியின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினர் நிதி உதவி வழங்குகின்றனர்.
வீர மரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீடு - ஹவில்தார் பழனி
ராமநாதபுரம்: இந்திய-சீன எல்லையில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
வீரமரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீடு
இந்நிலையில் இன்று பழனியின் மனைவி வானதி தேவியிடம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இலவச விபத்து காப்பீட்டு தொகையாக ரூ. 30 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.