ஏப்ரல் 11 முதல் மே 19 வரை இந்தியாவில் நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
மோடிக்கு ஹர்பஜன் வாழ்த்து - Amit Shah
டெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்காக, பிரதமர் மோடி, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
மோடிக்கு ஹர்பஜன் வாழ்த்து
இதில், பாஜக 166 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதனால், பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் சூழல் நிலவியுள்ளது. இந்நிலையில், பாஜகவின் வெற்றி குறித்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட பாஜவிற்கும், பிரதமர் மோடி, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கும் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.