தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அறிகுறியற்ற கோவிட்-19 நோயாளிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்! - கோவிட்-19 வழிகாட்டுதல்கள்

மிகவும் லேசான மற்றும் அறிகுறியற்ற கோவிட்-19 நோயாளிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள்
கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள்

By

Published : Jul 4, 2020, 11:44 PM IST

1. நோக்கம்

கோவிட்-19 பாதிப்புக்கு ஆளானவர் என்ற சந்தேகத்துக்குரியவர் / நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களைக் கையாள்வதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஏப்ரல் 7ஆம் தேதியன்று வெளியிட்ட உரிய வழிகாட்டுதல்களுடன், இந்த வழிகாட்டுதல்கள் கூடுதலாக அமைந்துள்ளன.

இப்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, தனித்திருக்கும் காலத்தில் நோயாளிகள் மருத்துவ ரீதியாக மிக லேசான/லேசான, நடுத்தர அல்லது தீவிரத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டு, அதற்கேற்ப (i) கோவிட் சிகிச்சை மையம், (ii) பிரத்யேக கோவிட் ஆரோக்கிய மையம் அல்லது (iii) பிரத்யேகமான கோவிட் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவார்கள்.

மிக லேசான / அறிகுறி தென்படுவதற்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்கள் ஏப்ரல் 7ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன. இப்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள், அதற்கும் உயர்வானவையாக இருக்கும்.

2. வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவதற்கான வரையறை:

  • சிகிச்சை தரும் மருத்துவ அதிகாரியால், நோயாளி மிக லேசான / அறிகுறி தென்படுவதற்கு முந்தைய நிலையில் உள்ளவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான வசதியும், குடும்பத்தினரின் தொடர்புகளைத் தனிமையாக வைத்திருப்பதற்கான வசதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.
  • 24 X 7 அடிப்படையில் அவரைக் கவனிக்க ஆள் வசதி இருக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்துதல் நிலையில் இருக்கும் காலம் முழுவதிலும், அவரை கவனித்துக் கொள்பவருக்கும், மருத்துவமனைக்கும் இடையில் தொடர்பு கொள்வதற்கான வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.
  • அவரை கவனித்துக் கொள்பவரும், நோயாளிக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களும், சிகிச்சை தரும் மருத்துவ அதிகாரி பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் நடைமுறையின்படி ஹைட்ராக்சிகுளோரோகுயின், புரோபிலாக்சிஸ் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தனது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். (பின்வரும் இணையத் தொடர்பு சுட்டியில் அதைப் பதிவிறக்கம் செய்யலாம் : https://www.mygov.in/aarogya-setu-app/). இந்தச் செயலி (ப்ளூடூத் மற்றும் வை-பை மூலம்) எல்லா நேரத்திலும் ஆக்டிவாக இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட இடைவெளிகளில் தன் ஆரோக்கியத்தை பரிசோதித்து, அந்தத் தகவல்களை மாவட்டக் கண்காணிப்பு அதிகாரிக்குத் தெரிவிக்க, நோயாளி ஒப்புக் கொள்ள வேண்டும். கண்காணிப்புக் குழுக்கள் அடுத்தகட்ட யோசனைகளை வழங்க இது உதவியாக இருக்கும்.
  • தாமாக முன்வந்து தனிமைப்படுத்திக் கொள்வதற்கான படிவத்தை (இணைப்பு - I) நோயாளி பூர்த்தி செய்திட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இவற்றைச் செய்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான தகுதியைப் பெறுவார்கள்.
  • https://www.mohfw.gov.in/pdf/Guidelinesforhomequarantine.pdf-இல் கூறப்பட்டுள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களுடன், இணைப்பு II-இல் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் நோயாளி மற்றும் அவரை கவனித்துக் கொள்பவர் பின்பற்ற வேண்டும்.

3. மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்?

நோயாளியும், அவரை கவனித்துக் கொள்பவரும், நோயாளியின் உடல் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தீவிர அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:

  • மூச்சுவிடுவதற்கு சிரமப்படுதல்
  • மார்பில் தொடர்ந்து வலி / அழுத்தம் உணர்தல்
  • மனக் குழப்பம் அல்லது எழுவதற்கு சிரமப்படுதல்
  • உதடுகள் / முகத்தில் நீல நிறம் தோன்றுதல் மற்றும்
  • சிகிச்சை தரும் மருத்துவ அதிகாரி கூறும் காரியங்கள்

4. வீட்டில் தனிமைப்படுத்துதலை எப்போது முடித்துக் கொள்வது?

அறிகுறிகள் தோன்றியதில் இருந்து (அல்லது அறிகுறி தென்படுதலுக்கு முந்தைய நிலையில் மாதிரி எடுத்த தேதியில் இருந்து) 17 நாட்கள் கழித்து மற்றும் காய்ச்சல் குணமாகி 10 நாட்கள் கழித்து, வீட்டில் தனிமையாக இருக்கும் நிலையை முடித்துக் கொள்ளலாம்.

வீட்டில் தனித்திருப்பதற்கான காலம் முடிந்த பிறகு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ABOUT THE AUTHOR

...view details